தார்ப்பாய் கம்பெனியில் தீ விபத்து


தார்ப்பாய் கம்பெனியில் தீ விபத்து
x
தினத்தந்தி 6 Feb 2022 5:36 PM IST (Updated: 6 Feb 2022 5:36 PM IST)
t-max-icont-min-icon

தார்ப்பாய் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை அருகே தனியாருக்கு சொந்தமான தார்ப்பாய் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. நேற்று அதிகாலை இந்த கம்பெனியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் மற்றும் அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தார்ப்பாய்கள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. 

சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும் தீ விபத்தில் அங்கிருந்த தார்ப்பாய்கள், எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story