பூண்டி ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு ஆய்வு
பூண்டி ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. அப்போது மதகுகளில் தண்ணீர் கசிவதை தடுக்க நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
பூண்டி ஏரி
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஜமீன்கொரட்டூர் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம். அதேபோல் பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
மதகுகளின் ஸ்திரத்தன்மை
இந்நிலையில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மண் பரிசோதனை துறைகளை பொறியாளர்கள் குழு நேற்று பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்து. முதலில் இணைப்பு கால்வாய் மற்றும் பேபி கால்வாய் பார்வையிட்டு அதிகபட்சமாக எத்தனை கன அடி தண்ணீர் திறக்கலாம் என்ற விவரத்தை தெரிந்து கொண்டது.
இந்த கால்வாயில் ஆங்காங்கே சேதமடைந்த கரைகளை சீர் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் பின்னர் உபரி நீர் திறந்து விடப்படும் மதகுகளின் ஸ்திரத்தன்மை பற்றி ஆராயப்பட்டது. மதகுகளில் ஆங்காங்கே தண்ணீர் கசிவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story