புகையிலை பொருட்கள், மதுவிற்ற 27 பேர் கைது
புகையிலை பொருட்கள், மதுவிற்ற 27 பேர் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக தூத்துக்குடி நகர மற்றும் ஊரக உட்கோட்டத்தில் தலா 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உட்கோட்டத்தில் தலா ஒரு வழக்கும், மணியாச்சி, சாத்தான்குளம் உட்கோட்டத்தில் தலா 3 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகளும் என மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 27 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 125 புகையிலை பாக்கெட்டுகள், 142 மதுபாட்டில்கள் மற்றும் 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story