கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் சிக்கினர்
கம்பத்தில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் சிக்கினர்.
கம்பம்:
கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் போலீசார் கம்பம் மணிக்கட்டி ஆலமரம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சாக்குபையுடன் நின்றிருந்த ஒரு வாலிபர் மற்றும் 2 பெண்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். இதில் வாலிபரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது சாக்குபையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் அவர் கம்பம் கோம்பை ரோடு தெருவை சேர்ந்த சரவணன் (வயது 31) என்பதும், தப்பியோடியவர்கள் மந்தையம்மன்கோவில் தெருவை சேர்ந்த சாந்தி (38), வைஷ்ணவி (31) என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். தப்பியோடிய சாந்தி, வைஷ்ணவியை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் கம்பம் 18-ம் கால்வாய் பகுதியில் கஞ்சா விற்ற குரங்குமாயன் தெருவை சேர்ந்த அமுதா (52) என்பரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story