தமிழக மக்களுக்கு பா.ஜ.க. துரோகம் செய்கிறது
நீட் தேர்வில் விலக்கு அளிக்காமல் தமிழக மக்களுக்கு பா.ஜ.க. துரோகம் செய்கிறது என்று கரூர் எம்.பி. ஜோதிமணி கூறினார்.
வேடசந்தூர்:
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு கரூர் எம்.பி. ஜோதிமணி நேற்று வந்தார். அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்பது ஒட்டுமொத்த மக்களின் கருத்தாகும்.
இதுதொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை கவர்னர் திருப்பி அனுப்பியது கண்டனத்துக்கு உரியது. தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்காமல் பா.ஜ.க. அரசு துரோகம் செய்கிறது என்றார். பேட்டியின்போது காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், குஜிலியம்பாறை வட்டார தலைவர்கள் கோபால்சாமி, தர்மர், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜம்மாள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story