பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற ரூ465 லட்சம் குட்கா பறிமுதல் டிரைவர் கைது
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக திருப்பூருக்கு காரில் கடத்த முயன்ற ரூ4 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக திருப்பூருக்கு காரில் கடத்த முயன்ற ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குட்கா கடத்தல்
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் பைபாஸ் சாலை அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பான்மசாலா, குட்கா என தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 473 கிலோ இருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்து 856 ஆகும்.
கைது
இதுதொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் அருகே உள்ள காரனம்பேட்டையை சேர்ந்த முத்துகுமார் (வயது 47) என்பதும், பெங்களூருவில் இருந்து குட்காவை திருப்பூருக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து முத்துகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் குட்கா மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story