வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
பட்டிவீரன்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பட்டிவீரன்பட்டி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ந்தேதி முடிவடைந்தது. வேட்பு மனு பரிசீலனை நேற்று நடந்தது. வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி உள்ளிட்ட 4 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு பட்டிவீரன்பட்டியில் என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பள்ளியில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உமாசுந்தரி, பாலசுப்பிரமணி, கீதா மற்றும் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குபெட்டிகளை வைப்பதற்கு பாதுகாப்பு அறை, ஜெனரேட்டர் வசதி, வாக்கு எண்ணும் மையத்தை கண்காணிப்பதற்கு இணையதள வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றனர்.
Related Tags :
Next Story