மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு


மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 10:36 PM IST (Updated: 6 Feb 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

எலக்ட்ரீசியனை கடித்த பாம்பை உயிருடன் மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடி:
எலக்ட்ரீசியனை கடித்த பாம்பை உயிருடன் மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
பாம்பு கடித்தது
மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மன்(வயது35). எலக்ட்ரீசியன். இவர் வீட்டின் அருகே ஒரு பாம்பு இருப்பதாக அவருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த பாம்பை தர்மன் பிடிக்க முயன்றார். அப்போது அவரை பாம்பு கடித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தர்மன் தன்னை கடித்த பாம்பை உயிருடன் கையில் பிடித்தபடி கொண்டு  வந்தார். 
பரபரப்பு 
இதனை பார்த்தவர்கள் அங்கிருந்து பயந்து ஓடினர். அப்போது பாம்பை கொண்டு வந்தவர் தன்னை பாம்பு கடித்து விட்டதாகவும், சிகிச்சைக்கு வந்ததாகவும் அங்கிருந்தவர்களிடம் கூறினார். ஆனால் அங்கிருந்த போலீசார் உயிருள்ள பாம்பை ஏன் பிடித்து கொண்டு வந்தாய் என கூறி  அவரை அங்கிருந்து அகற்றினர். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து பாம்புடன் சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 



Next Story