ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
மயிலாடுதுறை அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே நரசிங்கம்பேட்டை- ஆடுதுறை இடையே ரெயில்வே தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில்வே தண்டவாளத்தில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை மீ்ட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இறந்து கிடந்த அந்த முதியவரின் சட்டைப்பையில் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கான புற நோயாளி சீட்டு இருந்தது. அதில் குழந்தைவேல் என்று பெயர் எழுதப்பட்டிருந்தது. மேலும் திருபுவனத்தில் இருந்து ஆடுதுறை வரை பயணம் செய்ததற்கான பஸ் டிக்கெட் ஒன்றும் இருந்தது. பின்னர் உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் முதியவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story