பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல். ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்


பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல். ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 6 Feb 2022 11:54 PM IST (Updated: 6 Feb 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா சுங்கச்சாவடயில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 அணைக்கட்டு

பள்ளிகொண்டா சுங்கச்சாவடயில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து நெரிசல்

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சுங்கச்சாவடி உள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் சுங்கச்சாவடி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் காலை முதலே சென்றுகொண்டிருந்தன. இரவு 7.30 மணிக்கு சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிகளவில் சென்றதால் சுங்கச்சாவடியை உடனடியாக கடக்க முடியாமல் வாகனங்கள் நீண்ட தூரம் நின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் இருந்து இறங்கி சென்று சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஸ்டாக் நடைமுறைக்கு வந்தும் ஏன் வாகனங்களை உடனடியாக அனுப்ப மாட்டீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர்.

பேச்சுவார்த்தை 

இந்த நேரத்தில் ஆம்பூரில் இருந்து வேலூருக்கு அவசர சிகிச்சைக்காக செல்ல வேண்டிய 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நிரிசலில் சிக்கியது. மார்க்கத்திலும் வாகனங்கள் நீண்ட தூரம் நின்றிருந்ததால்  கடந்து செல்ல முடியாமல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கடும் அவதிப்பட்டார். இதனை அடுத்து பள்ளிகொண்டா போலீசார் சுங்கச்சாவடிக்கு வந்து வாகன ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவவத்தை சரிசெய்தனர்.

இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியரிடம் கேட்டதற்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. நாங்களும் கூடுமானவரை பாஸ்டாக் முறையை பயன்படுத்தி உடனுக்குடன் அனுப்பி வைக்கிறோம். 
இருந்தாலும் வழக்கத்துக்கு மாறாக நேற்று ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்ததால் தாமதம் ஏற்பட்டது என கூறினர். 

Next Story