உலகேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்
திருவாடானை அருகே உலகேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொண்டி,
திருவாடானை அருகே உலகேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகேசுவரர் கோவில்
திருவாடானை தாலுகா தளிர்மருங்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த உலநாயகி சமேத உலகேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் சன்னதி, விநாயகர் சன்னதி, கொடிமரம், மகா மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருப்பணிகள் நடைபெற்றன.
திருப்பணிகள் நிறைவு பெற்றதை ெதாடர்ந்து கோவில் முன்பு யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. யாக சாலை பூஜைகளை பாண்டுகுடி கணேச குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
கும்பாபிஷேகம்
நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
பின்னர் வேதமந்திரங்கள் முழங்க சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கருவறையில் சுவாமி அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் மதுரை, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், காரைக்குடி, தேவகோட்டை, மற்றும் மலேசியா நாட்டில் இருந்தும் ஆயிர வைசிய குலமக்கள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தளிர்மருங்கூர் கிராம பொதுமக்கள், பொன்னம்பலம் மூர்த்தி அய்யனார் சுவாமி வழிபடும் ஆயிரவைசிய குல மக்கள் சபையினர் மற்றும் திருப்பணிக்குழு தலைவர் பூவலிங்கம் செட்டியார் தலைமையில் இணைத் தலைவர்கள் ஜெயமணி, தர்மராஜன், ஜெயராமன், ராமநாதன், துணைத்தலைவர்கள் ராமசுப்பு, வெங்கடாச்சலம், ரெத்தினம், கவுரவ ஆலோசகர்கள் ராசு செட்டியார், பொன்னுச்சாமி, வாசுதேவன், தியாகராஜன், செயலாளர்கள் பிச்சைமணி, பொன்னம்பலம், முருகேசன், இணைச்செயலாளர்கள் போஸ், வெங்கட்ராமன், வெங்கடாஜலபதி, பொருளாளர் விஜயன், ராமநாதன் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.
அன்னதானம்
கும்பாபிஷேகத்தையொட்டி 3 நாட்கள் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. சிறப்பு பேருந்துகள் மற்றும் வாகன ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story