மாணவிக்கு பாலியல் தொந்தரவு


மாணவிக்கு பாலியல் தொந்தரவு
x
தினத்தந்தி 7 Feb 2022 12:53 AM IST (Updated: 7 Feb 2022 12:53 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

காரைக்குடி,

காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவரது தந்தை சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த மாணவி இதற்கு முன் புதுக்கோட்டையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.அப்போது காரைக்குடியில் அம்மா, தம்பி. தங்கையுடன் வசித்து வந்தார். வீட்டில் அவரது அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது அருகில் மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர் மோகன் குமார் என்பவரிடம் சிகிச்சை அளித்துள்ளனர்.அதன்பின் கொரோனா காலம் என்பதால் மாணவி வீட்டிலேயே ஆன்லைனில் படித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த டாக்டர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். தற்போது அந்த மாணவியின் தந்தை வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் மாணவி நடந்த சம்பவம் குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் டாக்டர் மோகன் குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story