வாக்காளர் விவரம் அடங்கிய பட்டியலை வார்டு வாரியாக தயார் செய்யும் பணி


வாக்காளர் விவரம் அடங்கிய பட்டியலை வார்டு வாரியாக தயார் செய்யும் பணி
x
தினத்தந்தி 7 Feb 2022 12:56 AM IST (Updated: 7 Feb 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி நியமன அலுவலர்களுக்கு வழங்க வாக்காளர் விவரம் அடங்கிய பட்டியலை வார்டு வாரியாக தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம், 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகளில் 102 நகரமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் 108 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 210 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தலை அமைதியான முறையிலும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் நகராட்சி தேர்தல் 42 வார்டுகளில் உள்ள 129 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

வாக்காளர்கள் முகவரி

 இதையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்கக்கூடிய வாக்காளர்களின் முகவரி, புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு அவற்றை அந்தந்த வாக்குச்சாவடி நியமன அலுவலர்களுக்கு வழங்குவதற்காக வார்டு வாரியாகவும், அந்தந்த வாக்குச்சாவடி மைய எண் வாரியாகவும் பிரித்து தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் நகராட்சி அலுவலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிந்ததும் இப்பட்டியல்கள், தேர்தலுக்கு முந்தைய நாள், வாக்குச்சாவடி நியமன அலுவலர்களுக்கு அளிக்கப்படும் இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பின்போது அவர்களுக்கு வழங்கப்படும். இந்த பட்டியலின் அடிப்படையில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களின் விவரத்தை வாக்குச்சாவடி நியமன அலுவலர்கள் சரிபார்ப்பார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story