சிறுதானிய பயிர்கள் சாகுபடி விழிப்புணர்வு


சிறுதானிய பயிர்கள் சாகுபடி விழிப்புணர்வு
x
தினத்தந்தி 7 Feb 2022 1:01 AM IST (Updated: 7 Feb 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

கிராமம் கிராமமாக சிறுதானிய பயிர்கள் சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது.

திருப்பரங்குன்றம்,
கிராமம், கிராமமாக சிறுதானிய பயிர்கள் சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது.
சிறுதானிய சாகுபடி
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன் குளத்தில் திருப்பரங்குன்றம் வேளாண்மைத்துறை சார்பில் சிறுதானிய சாகுபடி விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அட்மா திட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். வேளாண்மைதுறை துணை அலுவலர் வரத ராஜன் வரவேற்றார். 
விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் வேட்டையன் கலந்துகொண்டு வேளாண்மை துறை குறித்த அலங்கரிக்கப்பட்ட பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் விவசாயி களிடையே சிறு தானியங்கள் சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும்மானியத் திட்டங்கள் குறித்து பேசினார். வேளாண்கருத்து காட்சியை தொடங்கி வைத்துமாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி பேசினார். நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் இந்திரா ஜெயக்குமார், தனக்கன்குளம்ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்திபாண்டிமோகன், ஒன்றிய கவுன்சிலர் சுமதி செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை யொட்டி கலாஜதா என்ற அட்மா திட்ட கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது. 
ஏற்பாடு
இதனையடுத்து வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி, கரடிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பிரசார வாகனம் சென்று விவசாயிகளிடையே சிறுதானியப் பயிர்கள் சாகுபடி செய்து பயனடையுமாறு வலியுறுத்தப்பட்டது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் டேவிட் மனோகர், செல்வகுமார், கருப்பசாமி, சேகர், சவுந்தர், மருது ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story