புனித செபஸ்தியார் ஆலய திருவிழா
காளையார்கோவில் அருகே புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நடந்தது.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே வளையம்பட்டியில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 28-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை திருவிழா சிறப்பு திருப்பலி அருட்தந்தை ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செபஸ்தியாரின் உருவம் தாங்கிய சப்பரபவனி கிராம வீதிகளின் வழியாக நடைபெற்றது.நேற்று காலை காளையார்கோவில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்தும் சப்பர பவனி நடைபெற்றது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story