இளம்பெண் தற்கொலை
களக்காட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு கோவில்பத்து கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் நந்தினி (வயது 19) தையல் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் நந்தினியை அருகில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மதியம் வீட்டிற்கு வந்த நந்தினி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story