வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க பாதுகாப்பு அறை
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க பாதுகாப்பு அறை தயாராக உள்ளது.
வாடிப்பட்டி,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் முடிந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைெபற உள்ளது.
வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்பட 6 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க மதுரை பரவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் அனிஷ் சேகர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story