மணப்பெண் உள்பட 15 பேர் படுகாயம்


மணப்பெண் உள்பட 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Feb 2022 2:08 AM IST (Updated: 7 Feb 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சி அருகே லாரி மீது வேன் மோதியதில் மணப்பெண் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

துவரங்குறிச்சி
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 52). இவரது மகள் திருமணம் மார்த்தாண்டத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது.. இதற்காக மணப்பெண் உள்பட 15 பேர் ஒரு வேனில் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது ஆந்திராவில் இருந்து மதுரை நோக்கி சிமெண்டு ஏற்றிச் சென்ற லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
மணப்பெண் உள்பட 15 பேர் படுகாயம்
இந்த விபத்தில் மணப்பெண் ஜெயஸ்ரீ மற்றும் உறவினர்கள் 15 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story