மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் சென்று ஆய்வு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
வையம்பட்டி
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேற்று காலை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அவரின் பாதுகாப்பிற்காக 2 போலீஸ் வாகனங்களும் பின் தொடர்ந்து சென்றன. திருச்சியில் காலை 6 மணிக்கு சைக்கிளில் புறப்பட்ட அவர் 8.50 மணிக்கு வையம்பட்டி போலீஸ் நிலையத்தை சென்றடைந்தார். பின்னர் மீண்டும் அங்கிருந்து சைக்கிள் மூலம் திருச்சி நோக்கி புறப்பட்டார். அவர் மொத்தம் 120 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story