காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு
காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் வசிப்பவர் தண்டாயுதபாணி. இவரது மகன் அரவிந்த்குமார் (வயது 17). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு சென்றுள்ளார். பின்னர் 3 பேரும் அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது, தண்ணீரில் இருவர் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால், ஒருவரை மட்டுமே மீட்க முடிந்தது. அரவிந்த்குமாரை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இறங்கி சுமார் 2 மணி நேர தேடலுக்குப் பிறகு அரவிந்த்குமாரை பிணமாக மீட்டு ஸ்ரீரங்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அரவிந்த்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story