கும்பாபிஷேக விழா
முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
அலங்காநல்லூர்,
பாலமேடு அருகே சேந்தமங்கலம், கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடை பெற்றது. இதையொட்டி சிறப்பு யாகபூஜை நடந்தது. தொடர்ந்து மங்கள இசை முழங்க கோபூஜை, கஜ பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜை முடிந்து காசி, ராமேசுவரம், அழகர்கோவில் உள்ளிட்ட பல புனித தலங் களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து எடுத்துவந்து திருக்கோவிலில் வைத்து பூஜை செய்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ராஜகோபுர கலசங்களிலும், மூலவர் சன்னதி கோபுர கலசத்திலும் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்த அந்தபகுதி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பூஜை மலர்களும், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story