ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 397 பேருக்கு கொரோனா- மூதாட்டி உள்பட 2 பேர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 397 பேருக்கு கொரோனா- மூதாட்டி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 Feb 2022 2:46 AM IST (Updated: 7 Feb 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் உச்சத்தை எட்டிய தொற்று பாதிப்பு பிறகு குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 976 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 405 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 397 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 651 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 474 பேர் குணமடைந்தனர்.
2 பேர் பலி
கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. நேற்று மட்டும் 1,103 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 6 ஆயிரத்து 448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.
இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இதில் 90 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த 4-ந் தேதி உயிரிழந்தார். இதேபோல் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 65 வயது முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 729 ஆக உயர்ந்தது.

Next Story