ஈரோடு மாநகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
ஈரோடு மாநகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
முறைகேடுகளை தடுக்க...
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் உள்ளது. இதில் உள்ள 792 கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியிடப்பட உள்ளது.
தேர்தலையொட்டி ஈரோடு மாநகராட்சியில் 443 வாக்குச்சாவடி மையங்களும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்களும், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 1,251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
66 பறக்கும் படை
நகர்ப்புற தேர்தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 66 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் ஈரோடு மாநகர் பகுதியில் கனி ராவுத்தர் குளம், காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா உள்பட பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தாங்கள் மேற்கொள்ளும் சோதனைகளை வீடியோவில் பதிவு செய்தும் வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்தும், மக்களுக்கு பரிசு பொருட்கள் ஏதேனும் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story