பெருந்துறை பேரூராட்சி 1-வது வார்டு பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு; அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி பெருந்துறை பேரூராட்சி 1-வது வார்டு பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
பெருந்துறை
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி பெருந்துறை பேரூராட்சி 1-வது வார்டு பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள்
பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டில் உள்ளது சாராயக்காரன் தோட்டம் என்கிற குடியிருப்புப் பகுதி. இங்கு சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். வாக்காளர்கள் 200-க்கும் அதிகமானோர் உள்ளனர். இந்த குடியிருப்பு பகுதியில் அடிப்படை தேவைகளான சாக்கடை வசதி, ரோடு வசதி, தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி போன்றவைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தேர்தல் புறக்கணிப்பு
இதனால் ஆத்திரம் அடைந்த சாராயக்காரன் தோட்ட பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து வருகிற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தங்கள் குடியிருப்பு பகுதியின் மத்தியில் பிளக்ஸ் பேனர் ஒன்றை நேற்று வைத்துள்ளனர்.
அதில், ‘தங்களது கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றி தருவதாக உறுதியளிக்கும் வேட்பாளர், ஒரு உறுதிமொழி பத்திரத்தை எழுதி, அதில் கையொப்பம் போட்டுத் தந்தால், அவருக்கே வாக்களிக்க தயாராக உள்ளோம்’ என்றும் எழுதியுள்ளனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘ஒவ்வொரு தேர்தலிலும், உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், வெற்றி பெற்ற பிறகு எங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதனால் வருகிற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்’ என்றனர். தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சாராயக்காரன் தோட்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story