விழிப்புணர்வு பிரசார வாகனம்


விழிப்புணர்வு பிரசார வாகனம்
x
தினத்தந்தி 7 Feb 2022 2:10 PM IST (Updated: 7 Feb 2022 2:10 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நீதிபதி தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பாலியல் தாக்குதலில்இருந்து பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  நடைபெற்றது. இந்த பிரசார வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொறுப்பு) தனசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குழந்தை திருமணத்தை தடுத்தல்,  போக்சோ சட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட நீதிபதி தனசேகரன் வெளியிட்டார். இதில் முதன்மை சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா, பார் கவுன்சில் செயலாளர் அரசு வக்கீல் திருமலையப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், மற்றும் பாலசுப்பிரமணியன், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story