பெண்ணை கொன்று உடலை சூட்கேசில் வைத்து சாக்கடையில் வீசிய கொடூரம்
பெண்ணை கொன்று உடலை சூட்கேசில் வைத்து சாக்கடையில் வீசிய கொடூரம்
திருப்பூரில் பெண்ணை கொன்று உடலை சூட்கேசில் வைத்து அந்த சூட்கேசை கொலையாளிகள் சாக்கடையில் வீசி சென்ற கொடூரம் நடந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
சூட்கேசில் பெண் பிணம்
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் எம்.புதுப்பாளையம் என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் சிமெண்டு சிலாப் போட்டு மூடப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் சில அடி தூரத்திற்கு மூடிபோடாமல் திறந்து நிலையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை எம்.புதுப்பாளையம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயின் மூடிபோடாமல் திறந்து கிடந்த பகுதியில் நீல நிறத்தில் சக்கரம் வைத்த பெரிய சூட்கேஸ் ஒன்று ரத்தக்கரையுடன் கிடந்துள்ளது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் சிலர் அதன் அருகே சென்று பார்த்தபோது அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. மேலும் சூட்கேசின் வாய்பகுதியில் பெண்ணின் தலைமுடி தொங்கி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து நல்லூர் போலீசுக்கு தகவல் ெதரிவித்தனர். அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, உதவி கமிஷனர் லட்சுமண பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அந்த சூட்கேசை கைப்பற்றி ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிணவறையில் வைத்து அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் கை, காலை மடக்கி உடலை சூட்கேசுக்குள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை வெளிேய எடுத்தனர்.
கழுத்தை இறுக்கி கொைல
அந்த பெண்ணின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டிருந்ததற்கான காயம் உள்ளது. அவர் நைட்டி அணிந்துள்ளார். காலில் மெட்டி அணிந்துள்ளார். காது மற்றும் கழுத்தில் நகை எதும் இல்லை. வலது கையில் ஏ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. உடலில் வேறு எங்கும் காயம் இல்லை. நெற்றியில் பொட்டு வைத்துள்ளார்.
அந்த பெண் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம், அதன் பின்னர் உடலை சூட்கேஸில் வைத்து எடுத்து வந்து இங்கு போட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
யாரும் காணாமல் போனார்களா
அந்த பெண்ணை கொலை செய்த கொலையாளிகள் அவருடைய உடலை சூட்கேசில் அடைத்து ஏதாவது வாகனத்தில் கொண்டு வந்து சாக்கடை கால்வாயில் வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து முதலில் கொலையான பெண் யார் என அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் விலை உயர்ந்த சூட்கேஸ் என்பதால் அதில் உள்ள எண்ணை வைத்து அந்த சூட்கேஸ் எந்த கடையில் வாங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெண்கள் யாராவது காணாமல் போனார்களா? அது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதா? கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பெண்கள் யாரும் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
கொலை செய்யப்பட்டு 12 மணி நேரத்திற்கு உள்ளாகவே உடலை மடக்க முடியும். எனவே அந்த பெண்ணை நேற்று முன்தினம் இரவு ேவறு எங்கேயோ கொலை செய்து அதன் பின்னர் உடலை சூட்கேசில் அடைத்து சூட்சேசை வாகனத்தில் கொண்டு வந்து சாக்கடை கால்வாயில் வீசி சென்று இருக்கலாம், இதில் 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். எனவே அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தவிர பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எனவே வெளியூரில் கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்த போடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே கொலையான பெண் பெண் திருப்பூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரில் பெண்ணை கொன்று உடலை சூட்கேசில் அடைத்து வைத்து அந்த சூட்கேசை சாக்கடையில் வீசிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story