கொப்பரை கொள்முதலுக்கான முன்பதிவு தொடங்கியது
கொப்பரை கொள்முதலுக்கான முன்பதிவு தொடங்கியது
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியது.
கொப்பரை கொள்முதல்
உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதனால் இந்த பகுதியில் கொப்பரை உற்பத்தி அதிகம் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, காங்கேயம், வெள்ளகோவில் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை ஒருகிலோ 105 ரூபாய் 90 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்படும்.
அதன்படி கொப்பரையை கொள்முதல் செய்வதற்காக ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. அதனால் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளும்படி ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏக்கருக்கு 216 கிலோ கொள்முதல்
முன்பதிவு செய்வதற்கு வரும் விவசாயிகள் சிட்டா அடங்கல் மரத்தின் வயது குறிப்பிடப்பட வேண்டும்), ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ் புத்தக நகல், 2 போட்டோக்கள் ஆகியவற்றுடன் வரவேண்டும். ஒரு ஏக்கருக்கு 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும். உடைந்த கொப்பரை, சுருக்கம், அழுகியது, பூஞ்சாணம், பச்சையாக உள்ள கொப்பரை ஆகியவை வாங்கப்படமாட்டாது.
கொப்பரையை விவசாயிகளே தரம் பிரித்து கொண்டு வரவேண்டும். ஈரப்பதம் 5 சதவீதத்திற்கு கீழ் இருக்க வேண்டும். கொள்முதல் தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்த தகவல்களை உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story