அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி


அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி
x
தினத்தந்தி 7 Feb 2022 6:34 PM IST (Updated: 7 Feb 2022 6:34 PM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிக்கு தேர்வானவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று  தொடங்குகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடிப்படையில் தேர்வானவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்பு ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு உடனடியாக அவர்களுக்கு உரிய கல்லூரிகளில் சேர்க்கை பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து பொது பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு, ஆன்லைன் மூலமாக நடக்கிறது.
அரசு கல்லூரிகளில் 3 ஆயிரத்து 995 எம்.பி.பி.எஸ். இடங்கள், 157 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டான 1,390 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 1166 பி.டி.எஸ். இடங்களுக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு நடந்தது. இதன் மூலமாக 9 ஆயிரத்து 723 பேர் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று செவ்வாய்க்கிழமை, நாளை வரை 2 நாட்கள் நடக்கிறது. மாணவர்கள் தங்கள் அருகில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தங்களது சான்றிதழ்களை சமர்பித்து சரிபார்த்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 160 மாணவமாணவிகளுக்கு இங்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்கான பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று 100 மாணவமாணவிகளுக்கும், நாளை 60 மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது. இதற்காக பேராசிரியர்கள் குழு தயாராக உள்ளது என்று அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தெரிவித்தார்.
கல்லூரிகளில் சேர்க்கை
வருகிற 15ந்தேதி மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 16ந்தேதி கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை பதிவிறக்கம் செய்யவும், 17ந்தேதி முதல் 22ந் தேதி வரை மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story