மண் எடுப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மண் எடுப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2022 7:04 PM IST (Updated: 7 Feb 2022 7:04 PM IST)
t-max-icont-min-icon

மண் எடுப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி:-

சீர்காழி அருகே 75.கொண்டத்தூர் கிராமத்தில் விவசாயம் மற்றும் குடிநீரை பாதிக்கும் வகையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மண் எடுப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளை செயலாளர் மேகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வக்கீல் ஞானப்பிரகாசம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிம்சன், வெண்ணிலா, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் நூர்ஜஹான், பிரபாகரன், புருஷோத்தமன், கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story