பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
தூத்துக்குடியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர் வேட்பு மனு வாபஸ் நடந்தது. இதைத்தொடர்ந்து இறுதிபட்டியல் வெளியிடப்பட்டது. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கினார்கள். கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்க்ள. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பறக்கும் படை
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களுக்கும் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story