திட்டக்குடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.1¾ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை


திட்டக்குடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.1¾ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Feb 2022 9:56 PM IST (Updated: 7 Feb 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே உரிய ஆவணமின்றி மோட்டார் சைக்கிளில் எடுத்து வரப்பட்ட ரூ.1¾ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திட்டக்குடி, 

வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
அந்த வகையில் திட்டக்குடி நகராட்சி பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று திட்டக்குடி அடுத்த பெருமுளை மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு, விசாரணை நடத்தியதில், அவர், கீரனூரை சேர்ந்த சண்முகம் மகன் செல்வகுமார்(வயது 35) என்பதும், அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஒப்படைப்பு

இதையடுத்து உரிய ஆவணமின்றி மோட்டார் சைக்கிளில் எடுத்து வரப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆண்டவரிடம் ஒப்படைத்தனர். அப்போது தேர்தல் துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story