போதமலை கள்ளவழி கருப்பனார் கோவில் திருவிழா 100-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலியிட்டு அன்னதானம்


போதமலை கள்ளவழி கருப்பனார் கோவில் திருவிழா 100-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலியிட்டு அன்னதானம்
x
தினத்தந்தி 7 Feb 2022 10:06 PM IST (Updated: 7 Feb 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

போதமலை கள்ளவழி கருப்பனார் கோவில் திருவிழா 100-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலியிட்டு அன்னதானம்

நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி போதமலை பகுதியில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. வனப்பகுதியில் உள்ள இந்த கோவில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் திருவிழா தொடங்கி கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தன.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, பன்றிகள் பலியிடப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர் அவற்றை சமைத்து, அரிசி சாதத்தை உருண்டயாக பிடித்து கறிவிருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அசைவ உணவுகளை சாப்பிட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story