கொத்தனாருக்கு கத்திக்குத்து


கொத்தனாருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 7 Feb 2022 10:56 PM IST (Updated: 7 Feb 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

கொத்தனாருக்கு கத்திக்குத்து

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் அச்சுதராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பூபதி (வயது40). கொத்தனார். இவருடைய மனைவி சுஜாதா (35). நேற்று முன்தினம் அருள்பூபதிக்கும், சுஜாதாவுக்கும் இடையே வீட்டில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவில் சத்தம் கேட்டுள்ளது. அப்போது வீட்டின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி (52), மன்னார் என்கிற இளங்கோவன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வீட்டிற்குள் புகுந்து அருள்பூபதியை தாக்கி அவருடைய நெஞ்சில் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அருள்பூபதி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அருள்பூபதி மனைவி சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக மன்னார் என்கிற இளங்கோவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story