நேதாஜி ராணுவப்படை வாரிசுகள் சங்கத்தினர் தடுத்து நிறுத்தம்
நேதாஜி ராணுவப்படை வாரிசுகள் சங்கத்தினர் தடுத்து நிறுத்தம்
மயிலாடுதுறை:-
சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம், தொழில் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய நேதாஜி ராணுவப்படை வாரிசுகள் சங்கத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று சங்கத்தின் அகில இந்திய தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் செயலாளர் நடராஜன், அமைப்பு பொதுச்செயலாளர் கதிரேசன், மாநில துணைத் தலைவர் குயிலன், பொதுச்செயலாளர் சந்திரா, மகளிரணி தலைவர் பானுமதி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அலுவலகம் எதிரே சாலையில் தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். அலுவலக வளாகத்துக்குள் அனுமதி கிடையாது என்று தெரிவித்ததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story