திருமண மண்டப மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு
திருமண மண்டப மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா உப்பாரப்பள்ளியை சேர்ந்தவர் சபரி (வயது 22). கட்டிட மேஸ்திரி. இவர் ஓசூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தார். நேற்று முன்தினம் அவர் நண்பர்களுடன் சேர்ந்து, மண்டபத்தின் மேல் மாடியில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, சபரி எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி, அருகில் உள்ள வீட்டின் மேல்தளத்தில் விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story