தர்மபுரியில் காவல் துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 50 மனுக்களுக்கு உடனடி தீர்வு


தர்மபுரியில் காவல் துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 50 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 7 Feb 2022 11:10 PM IST (Updated: 7 Feb 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 50 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன.

தர்மபுரி:
தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 50 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன.
குறை தீர்க்கும் முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் தர்மபுரியில் உள்ள கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் முகாமை தொடங்கி வைத்தார். 
இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்தனர்.
50 மனுக்கள் மீது நடவடிக்கை
இந்த முகாமில் 70 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு புகார்தாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குடும்ப பிரச்சினை, வழித்தட பிரச்சினை உள்ளிட்ட 50 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. இந்த முகாமில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம், தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Next Story