இண்டூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை


இண்டூர் அருகே  கட்டிட மேஸ்திரி தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2022 11:13 PM IST (Updated: 7 Feb 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

இண்டூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பேடரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்குத் திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு பவித்ரா பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இண்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story