குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 7 Feb 2022 11:14 PM IST (Updated: 7 Feb 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வாய்மேடு:
வாய்மேடு அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
நாகை மாவட்டம் வாய்மேடு - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் உடைய தேவன்காடு பகுதியில் பூமிக்கு அடியில் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கி வீணாகி வருகிறது.
 இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தேங்கி கிடக்கும் தண்ணீரில் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story