தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனம்
விழுப்புரத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை எதிரே தேர்தல் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி விழிப்புணர்வு பாடல்கள், இசைக்கருவிகளுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு டிஜிட்டல் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சக்தி, காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பாபுசெல்வத்துரை, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ரத்தினமணி, ஆசிரியர்கள் பெருமாள், ஹேமலதா, தமிழழகன், சின்னப்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story