அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையில் தலைமை இயக்குனர் அத்துல் கார்வால் ஆய்வு


அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையில் தலைமை இயக்குனர் அத்துல் கார்வால் ஆய்வு
x
தினத்தந்தி 7 Feb 2022 11:49 PM IST (Updated: 7 Feb 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையில் தலைமை இயக்குனர் அத்துல் கார்வால் ஆய்வு செய்தார்.

அரக்கோணம்

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4-வது பட்டாலியனில் நேற்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குனர் அத்துல் கார்வால் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், பேரிடர் காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் மோப்ப நாய்களையும் பார்வையிட்டார். இதனையடுத்து பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் குறித்தும், பயிற்சிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

 தொடர்ந்து, வீரர்களுடன் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் நலன் குறித்த ஆலோசனைகளை வழங்கி வீரர்களுடன் கலந்துரையாடினார்.  அப்போது வீரர்களின் குறைகளை கேட்டறிந்தார். 
நிகழ்ச்சியில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story