புகழூர் நகராட்சியில் 76 பேர் போட்டி
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதில், புகழூர் நகராட்சியில் 76 வேட்பாளர்கள் பேட்டியிடுகின்றனர்.
நொய்யல்
பட்டியல் வெளியீடு
புகழூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், சுயேச்சைகள் உட்பட 125 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவை அனைத்தும் கடந்த சனிக்கிழமை அன்று பரிசீலனைக்கு பின் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வாபஸ் வாங்குவதற்கு இறுதிநாளான நேற்று திங்கட்கிழமையன்று 49 பேர் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இதனால் தற்போது தி.மு.க. சார்பில் 22 பேர், அ.தி.மு.க. சார்பில் 22 பேர், பா.ஜ.க. சார்பில் 7 பேர், தே.மு.தி.க. சார்பில் 3 பேர், நாம் தமிழர் கட்சி சார்பில் 3 பேர், பா.ம.க. சார்பில் 2 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஒருவரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 15 பேர் என மொத்தம் 76 பேர் களம் காண்கின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனல் பறக்கும் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர்.
தி.மு.க.-அ.தி.மு.க.
இந்நிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வார்டு கவுன்சிலர் வேட்பாளர் பெயர் வருமாறு:- வார்டு1: சத்தியமூர்த்தி, வார்டு 2: குணசேகரன், வார்டு 3: சிவகாமி, வார்டு 4 : சுசீலா, வார்டு 5 : பூவிழி, வார்டு 6: கல்யாணி, வார்டு 7: சகுந்தலா, வார்டு 8: கோபால், வார்டு 9: ரம்யா, வார்டு 10: நவீன், வார்டு 11: நந்தினி, வார்டு 12: நந்தா, வார்டு 13: தமிழ்ச்செல்வி, வார்டு 14 : மீனாட்சி, வார்டு 15: சபீனா நவாஸ்கான், வார்டு 16: செல்வகுமார், வார்டு 17: சுதா, வார்டு 18 : நவநீதகிருஷ்ணன், வார்டு 19: பிரதாபன், வார்டு 21: தங்கராசு, வார்டு 23: ராமு, வார்டு 24: மோகன்ராஜ் ஆகிய 22 பேரும், அ.தி.மு.க. சார்பில் வார்டு1: விவேகானந்தன், வார்டு 2: அருண்குமார், வார்டு 3: கலைச்செல்வி, வார்டு 4 : கவுரி, வார்டு 5: சாந்தி குப்புசாமி, வார்டு 6: சாந்தி கந்தசாமி, வார்டு 7: விஜயலட்சுமி, வார்டு 8: சுரேஷ், வார்டு 10: வடிவேல், வார்டு 11: ஜெயபிரபா, வார்டு 13: மல்லிகா, வார்டு 14: கண்ணகி, வார்டு 15: சரண்யா, வார்டு 16 :சரன்ராஜ், வார்டு 17: ஹேமலதா, வார்டு18: மோகன்குமார், வார்டு 19: சுப்பிரமணி, வார்டு 20: சத்தியமூர்த்தி, வார்டு 21: லிங்கேஸ்வரி, வார்டு 22: யசோதை, வார்டு 23: ஜெயா, வார்டு 24: உதயன் ஆகிய 22 பேரும் போட்டியிடுகின்றனர்.
இதர கட்சிகள்
பா.ஜ.க. சார்பில் வார்டு 1: மணி, வார்டு 7: மகாதேவி, வார்டு 8: கோபிநாத், வார்டு 9: கவிதா, வார்டு 10: ஹரிராஜ், வார்டு 11: பத்மாவதி, வார்டு 20: பிரபாகரன் ஆகிய 7 பேரும், தே.மு.தி.க. சார்பில் வார்டு 8: புகழேந்தி, வார்டு19: மனோகரன், வார்டு 20: மனோ ஆகிய 3 பேரும், நாம் தமிழர் கட்சி சார்பில் வார்டு 2: ஜெயராஜ், வார்டு 8: முகமது அபுபக்கர் சித்திக், வார்டு 10: சுரேஷ் ஆகிய 3 பேரும், பா.ம.க. சார்பில் வார்டு 8: விஜயகுமார், வார்டு 13: சுதிதா ஆகிய இருவரும், வார்டு 20: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்துமதி என்பவரும், வார்டு 22: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் சுரேஷ் என்பவரும், சுயேச்சைகள் சார்பில் வார்டு 2, 4, 5, 9, 10, 12, 16, 18, 19, 24 ஆகிய 10 வார்டுகளில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
Related Tags :
Next Story