முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், வட்ட வழங்கல் அலுவலருமான அய்யப்பன் தலைமையில் முதுகுளத்தூர் பஸ் நிலையம் முன்பு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முதுகுளத்தூர் நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, லாரி டிைரவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.68 ஆயிரத்து 900 இருந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் முதுகுளத்தூர் மெயின்ரோட்டில் துணை தாசில்தார் ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முதுகுளத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த முகம்மது உசேன், உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.