187 பதவிகளுக்கு 902 பேர் போட்டி


187 பதவிகளுக்கு 902 பேர் போட்டி
x
தினத்தந்தி 8 Feb 2022 2:24 AM IST (Updated: 8 Feb 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

187 பதவிகளுக்கு 902 பேர் போட்டியிடுகின்றனர்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளுக்கும், அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளுக்கும் மற்றும் ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், இலுப்பூர், கீரனூர், கீரமங்கலம், கறம்பக்குடி, பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் உள்ள 189 பதவிகளுக்கு போட்டியிட 1,114 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1,095 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 191 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இலுப்பூர், கீரமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 187 பதவிகளுக்கு மொத்தம் 902 பேர் போட்டியிடுகின்றனர்.


Next Story