காளஹஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


காளஹஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 8 Feb 2022 2:24 AM IST (Updated: 8 Feb 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

காளஹஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

மெலட்டூர்;
பாபநாசம் தாலுகாவில் உள்ள, புரசக்குடி கிராமம் இயற்பியல் மதை சர். சி. வி. ராமன் பிறந்த கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் உள்ள ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. 
குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு மூலவர் உள்பட 11 கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கில் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், துணை தலைவர் தங்கமணிசுரேஷ்குமார், வேம்பகுடி ஊராட்சி தலைவர் சத்தியவாணி சீரங்கன், மற்றும்  பலர் கலந்து கொண்டனர். குடமுழுக்கு ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் மணிகண்டன், திருவையாறு சரக ஆய்வாளர் குணசுந்தரி, மற்றும் பலர் செய்து இருந்தனர். 

Next Story