ஒரே வாரத்தில் 50 நாய்கள் செத்தன; வைரஸ் பாதிப்பால் இறந்ததாக பரபரப்பு
உத்தர கன்னடா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 50 நாய்கள் செத்துள்ளன. இந்த நாய்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி செத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர கன்னடா: உத்தர கன்னடா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 50 நாய்கள் செத்துள்ளன. இந்த நாய்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி செத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
50 நாய்கள் செத்தன
உத்தர கன்னடா மாவட்டத்தில் நாய்களுக்கு மர்ம வைரஸ் பாதிக்கத் தொடங்கி உள்ளது. அதாவது இம்மாவட்டத்தில் அங்கோலா, ஜோயிடா ஆகிய தாலுகாக்களில் ஏராளமான நாய்களுக்கு கெனைன் பார்வோ வைரஸ் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மர்ம வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நாய்கள் முதலில் தனது சக்தியை இழந்து விடுகிறது.
பின்னர் வாந்தி ஏற்பட்டு சாப்பிட முடியாத நிலை அடைவதுடன் எழ முடியாமல் குறுகிய நாட்களிலேயே இறக்க நேரிடுகின்றன. நாய்களுக்கு சிகிச்சை அளிக்காததால் கடந்த ஒரு வாரத்தில் அங்கோலா மற்றும் ஜோயிடா தாலுகாக்களில் சிகிச்சை பலனின்றி 50-க்கும் மேற்பட்ட நாய்கள் செத்துள்ளன.
டாக்டர்கள் பற்றாக்குறை
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கால்நடை ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இறுப்பதாக கூறப்படுகிறது. டாக்டர்கள், ஊழியர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் நாய்கள் இறக்க நேரிடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட நாய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அத்துடன் மேற்கண்ட தாலுகாக்களில் 45 நாட்கள் முதல் 2 மாத வயதுடைய குட்டி நாய்களை இந்த கெனைன் பார்வோ வைரஸ் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story