விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்; அரசு அதிகாரி கைது
நிலப்பட்டாவில் பெயர் மாற்றிக்கொடுக்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.
ஹாசன்: நிலபட்டாவில் பெயர் மாற்றிக்கொடுக்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.
நிலப்பட்டாவில் பெயர் மாற்ற...
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா சோளேகெரே கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். விவசாயியான இவர், நிலபட்டாவில் பெயர் மாற்ற சோளேகெரே கிராம பஞ்சாயத்துமு அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
அப்போது விவசாயி வெங்கடேசிடம், கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சித்தேஷ் நிலபட்டா பெயர் மாற்ற வேண்டுமானால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேஷ் மாவட்ட ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் ஊழல் தடுப்பு படை போலீசார், விவசாயி வெங்கடேசிடம் ரசாயண பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து அதனை கொடுக்கும்படி சில அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். அதன்படி வெங்கடேசும், கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று சித்தேசிடம் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அதனை அவரும் வாங்கி கொண்டார்.
கைது
இதனை மறைவாக நின்று கவனித்த ஊழல் தடுப்பு படை போலீசார், சித்தேசை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான அவர் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story