கொரோனாவால் இறந்த நண்பரின் மனைவியை திருமணம் செய்த வாலிபர்


கொரோனாவால் இறந்த நண்பரின் மனைவியை திருமணம் செய்த வாலிபர்
x
தினத்தந்தி 8 Feb 2022 3:00 AM IST (Updated: 8 Feb 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் இறந்த நண்பரின் மனைவியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கொள்ளேகாலில் நடந்துள்ளது.

கொள்ளேகால்: கொரோனாவால் இறந்த நண்பரின் மனைவியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கொள்ளேகாலில் நடந்துள்ளது.
 
 கொரோனாவுக்கு நண்பர் பலி

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்குமார் (வயது 41). இவருக்கும் ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகாவுக்கும்(30) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. சேத்தன் குமார் பெங்களூரு வில் உள்ள  தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கொரோனா 2-வது அலையின் போது சேத்தன்குமார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அம்பிகா மிகவும் மனம் உடைத்து காணப்பட்டார்.

மேலும் அம்பிகா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த சேத்தன்குமாரின் நண்பர் லோகேஷ், தற்கொலைக்கு முயன்ற அம்பிகாவை காப்பாற்றினார். 

 மறுமணம் செய்தார்

இதைதொடர்ந்து சில நாட்களில் லோகேஷ், அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதற்கு அம்பிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதுபற்றி அவர்கள் தங்களது வீட்டினரிடம் தெரிவித்தனர். அவர்களும் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினர். 

இந்த நிலையில் கடந்த ஜனவரி 27-ந் தேதி அம்பிகாவுக்கும், லோகேசுக்கும் பெங்களூருவில் திருமணம் நடந்தது. கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணமாக திருமணம் செய்த லோகேசின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story