சேலம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்- நாளை மறுநாள் நடக்கிறது


சேலம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்- நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 8 Feb 2022 3:42 AM IST (Updated: 8 Feb 2022 3:42 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

சேலம்:
சேலம் இரும்பாலை ரோடு வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஜி.சிவகுமார் தலைமையிலும், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி சுப்ரமணியன் தலைமையிலும், கிருஷ்ணகிரி வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி இ.சத்கிராமன் தலைமையிலும் பிப்ரவரி மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
கூட்டத்தில் வருங்கால வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி எண், யுஏஎன் எண், செல்போன் எண் ஆகிய விவரங்களை நாளைக்குள் (புதன்கிழமை) சேலம் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தவும். ஈரோடு மாவட்ட அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது ro.salem@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம்.
இந்த தகவலை வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். 

Next Story