சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3,206 பேர் போட்டி-தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் போட்டியின்றி தேர்வு


சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3,206 பேர் போட்டி-தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 8 Feb 2022 3:42 AM IST (Updated: 8 Feb 2022 3:42 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3,206 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3,206 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 783 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற கடைசிநாளான நேற்று 149 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் 618 பேர் போட்டியிடுகின்றனர்.
அதே போன்று மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 165 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 971 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று 276 பேர் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இறுதியாக 165 வார்டுகளிலும் 682 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோன்று மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில் 474 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 2,662 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 702 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இறுதியாக 31 பேரூராட்சிகளிலும் 1,906 பேர் போட்டியிடுகின்றனர். சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் 699 பதவிகளுக்கு மொத்தம் 3,206 பேர் போட்டியிடுகின்றனர்.
போட்டியின்றி தேர்வு
மேச்சேரி பேரூராட்சி 11-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் தனம் மற்றும் 13-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சுமதி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
அதே போன்று தெடாவூர் பேரூராட்சி 7-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் பாலசுந்தரம், கொளத்தூர் பேரூராட்சி 4-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மங்கம்மாள் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story