மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சாலையில் திடீர் பள்ளம்; போக்குவரத்து மாற்றம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சாலையில் நேற்று காலை திடீரென பள்ளம் ஒன்று உருவானது. இதைக்கண்ட அந்த சாலையில் வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே அப்படியே நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் சாலையில் விழுந்த பள்ளத்தை ஆய்வு செய்தனர். பின்னர் லஸ் சாலை, சிவசாமி சாலை சந்திப்பில் தடுப்பு வைத்து மேற்கொண்டு வாகனங்கள் செல்லாதவாறு அடைத்தனர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டன. இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் பள்ளத்தால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story